குக் வித் கோமாளி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் கொடி கட்டி பறப்பவர் தான் நம்ம விஜய் டிவி புகழ் இப்போ படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
கடலூரை சேர்ந்த புகழ் சாதாரண மெக்கானிக்காக துவங்கி பார்க்காத வேலையில்லை பிழைப்புக்காக ஒரு வேலை கனவுக்காக விஜய் டிவின்னு கடினமாக உழைச்சவர்.
முதலில் உதவியாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து குக் வித் கோமாள் யின் கள்ளம் கபடமற்ற தனக்கே உரிதான பாணியில் மக்களை சிரிக்க வைத்தவர். தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் துவங்குவதாக செய்திகள் வரும் நிலையில் அவரும் இருப்பார் என எதிர்ப்பார்க்கபட்டது.
செப் தாமுவும் அதை தான் சொன்னார், ஆனால் பிரமோவை பார்த்ததில் கோமாளியாக புகழ் வரவில்லை. இதனை அடுத்து நிகழ்ச்சியில் புகழ் சிறப்பு விருந்தினராக அடிக்கடி வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் அவர் அஸ்வின் உடன் என்ன சொல்கிறாய் படத்தில் நடித்து ரிலீஸ் ஆகியது அடுத்து வலிமை படம் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிஸ் யூ பார்ட்னர், ஐ லவ் யூ என ஒரு பெண்ணுடன் ஜோடியாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இன்ப அதிர்ச்சியில் திளைத்து வருகின்றனர். ஒஹோ அப்ப இவங்க தான் புகழ் வருங்கால மனைவியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் விஜய் டிவி புகழ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக இது வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.