சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ரோஜா, அதில் நடிக்க மறுத்த முக்கிய நடிகை ஷாமிலி பேச்சு வைரல் ஆகி வருகிறது. 1000 எபிசோடுகளை தாண்டி மக்களுக்கு பிடித்த டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் தொடர் தான் ரோஜா.
அதில் சிபு – பிரியங்கா, வடிவுக்கரசி முக்கியமான லீடாக நடித்து வருகின்றனர். அதில் வில்லியான அனுவாக நடித்து வந்தார் ஷாமிலி. ஷாமில் பல டிவி சீரியலில் நடித்து உள்ளார் அதில் பரம்பரை, பொன்னூஞ்சல், வள்ளி, வாணி ராணி உள்ளிட்டவை அதில் குறிப்பிடதக்கவை.
அவர் கடந்த ஆண்டு சிவக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஷாமிலி. திருமணத்தை அடுத்து தொடர்ந்து நடித்தும் வந்தார்.
இந்த நிலையில் தான் கர்ப்பமான ஷாமில் அந்த ரோலில் நடிக்க முடியாது என சீரியலில் இருந்து முழுவதுமாக விலகினார். இதனை அடுத்து தனது ரசிகர்கள் பலரும் அவரது வெளியேற்றம் குறித்து கேள்வி கேட்டதால் அவர்களுக்கு பதில் அளிக்க ஆரம்பத்தில் வீடியோ போட்டவர்.
நடிகை ஷாமிலி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் கர்ப்பமானது குறித்து அவரது சமீபத்தில் பிறந்த பெண் குழந்தை வரைக்கும் அனைத்தும் உள்ளது.
பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல லைவில் வந்த சாமிலி குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருப்பதாகவும், தான் இனி ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பில்லை எனவும் பேசினார் அதற்க்கு பதில் அளிப்பது போல ரசிகர் ஒருவர்.
நீங்க ஆண்டி மாதிரி இருக்கீங்க என கமெண்ட் அடிக்க கடுப்பான ஷாமில் குழந்தை பிறந்தா ஆண்டியா? நான் எடையை கூட குறைச்சிருக்கேன் என கூறினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது, ரசிகர்கள் பலரும் இதற்க்கு பதில் அளித்து வருகின்றனர்.