கன்னட சினிமாவின் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சொந்தமாக கோடிக் கணக்கான பணம், சகல வசதிகளுடன் கூடிய பங்களா இருந்தாலும், அவர் தனது அப்பா ராஜ்குமார் வாழ்ந்த சிறிய கூரை வீட்டின் மீது தான் மிகுந்த ஆசையாகவும், மதிப்போடும் இருந்துள்ளார்.

கன்னட உலகில் நடிகர் புனித் என்றாலே போது அந்த படம் சூப்பர் ஹிட் தான் என்ற அளவுக்கு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் புனித்.

நல்ல நடிகர் மட்டும் அல்ல, நல்ல மனம் படைத்தவரும் கூட அவர் செய்த பல நல்ல செயல்களில் சில தான் ஆதரவற்ற குழந்தைகளுக்கான படிப்பு, பள்ளி என சில விஷயங்கள்.

கடந்த ஆண்டில் அவரது திடீர் மரணம் யாரும் சற்றும் எதிர்பாராத ஒன்று அது கனவாகவே இருக்க கூடாதா என வேண்டிய சம்பவம். அவரது முகத்திற்க்காக அவரது இறுதி நேரத்தில் வந்த கோடிக்கணக்கான மக்கள் தான் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தம்.

இப்படி பட்ட மனுஷனா இவ்வளவு சீக்கிரமாக இறந்து போகணும்-னு பலரும் வருத்தபட வைத்த புனித் மிக எளிமையானவர். அவரது சொந்த ஊருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வருவார், அப்போது அவர்கள் வாழ்ந்த வீட்டை அப்பா ராஜ்குமாருக்கு நினைவு இல்லமாக மாற்ற நினைத்தார்.

அதை பலமுறை மற்றவர்களிடம் பகிர்ந்தும் கொண்டவர், அவரது மறைவுக்கு பிறகு அவர் குடும்பத்தினர் அதை செய்து வருகின்றனர். புனித் ராஜ்குமார் ஆசைபடியே அந்த பாரம்பரிய வீட்டை சீரமைக்கும் பணிகள் முடக்கிவிட பட்டு வேலையும் நடந்து வருகிறது.

அந்த வீட்டில் அவர்களின் அரிய புகைப்படங்களை பொது மக்களின் பார்வைக்காக வைக்க உள்ளதாகவும் அவரது உறவினர் கோபால் தெரிவித்து உள்ளார்.

Categorized in: