ஆன் லைன் மூலமாக ஆர்டர் செய்து பொருட்கால் வாங்குவதை ஒரு காலத்தில் ஆடம்பரமாக நினைத்தார்கள். ஆனால் இப்போது அதுவே அத்தியாவசிய பொருட்களுக்கு வழி.

கொரானா முதல் அலையில் துவங்கி மூன்றாவது அலை வரை பாண்டமிக் காலகட்டமாக இருப்பதால் திடீர்ன்னு லாக்டவுன் போடுறாங்க. இதுக்கு ஏத்தாற்போல கடைகளும் திறக்கணும், குறிப்பிட்ட நேர்த்துக்குள்ள போகலன்னா அவங்களுக்கான தீர்வாக தான் ஆன் லைன் ஷாப்பிங் மாறியுள்ளது.

இந்த நிலையில் தான் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆன்லைன் காதல் ஜோடி தங்களது திருமணத்தை கூகுள் மீட் ஆப்பின் மூலமாக செய்ய உள்ளார்களாம்.

இது குறித்து பேசிய மணமக்கள் சாண்டிபன் சர்கார் – அதிதி தாஸ் தங்கள் திருமணம் முதல் லாக்டவுனில் முடிவு செய்ய்பட்டதாகவும்,

ஆனால் கொரானா காரணமாகக் திருமணத்தை தள்ளிப்போடு காத்திருந்து தற்போது மூன்றாவது அலையே வந்து விட்டதால் பொறுமையை இழந்து வரும் 24 ஆம் தேதியில் திருமணத்தை முடிவு செய்துள்ளார்களாம்.

மேலும் மணமகன் சர்காருக்கு கடந்த மாதம் கொரானா தொற்று இருந்ததாகவும் மற்ராவர்களுக்கும் அந்த நிலை வேண்டாம் எனவும் இந்த முயற்சி. மேலும் திருமணத்திற்க்கு வர முடியாதவர்கள் கூகிள் மீட் ஆப்பின் மூலமாக திருமணத்தில் கலந்து கொள்ளாவும், மொய் பணத்தை கூகுள் பே மூலமாக செலுத்தவும்,

பரிசு பொருட்களை பிளிப்கார்ட் மூலம் அனுப்பவும் என திருமண அழைப்பிதழில் அச்சிட்டே கொடுத்துள்ள விஷயம் அதிக சுவாரஸ்யம். இந்த இணைய வழி காதல் ஜோடியின் ஆன்லைன் திருமணத்திற்க்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Categorized in: