நடிகர் தனுஷ் தனது அப்பா ஏமாற்றி விட்டதாகவ அவர் மீது ஆத்திரமும் கோபமும் அதிகமாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது அதிக வைரல் ஆகி வருகிறது.
– Advertisement –
நடிகர் தனுஷின் இயற் பெயர் சரவணன் சினிமாவுக்காக தனுஷ் என பெயர் மாற்றம் செய்துக் கொண்டார். அவரது முதல் படம் 2002 வெளியான துள்ளுவதோ இளமை.
ஷெரின், சுதீப் என பலர் தனுஷீடன் இணைந்து நடித்தனர், பின்னர் காதல் கொண்டேன் அவரது சொந்த அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார். தொடர்ந்து பொல்லாதவன், படிக்காதவன், புதுப்பேட்டை, அசுரன் என அடுத்து தனுஷ் தொட்டதெல்லாம் வெற்றி தான்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா வை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ்.
ஐஸ்வர்யா திருமணத்திற்கு முன்னர் டாக்டர் எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக துறையில் பணிப் புரிந்து கொண்டிருந்தார். திருமணம் ஆகி 18 வருடங்களை கடந்த இந்த காதல் தம்பதிகளுக்கு யாத்திரா, லிங்கா என்ற இரண்டு செல்ல மகன்கள் உள்ளனர்.
– Advertisement –
சமீபத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 18 வருடம் காதலர்களாக, நண்பர்களாக, பெற்றோர்கள் என வாழ்ந்து விட்டோம்.
அடுத்தகட்டமாக நாங்கள் எங்களுக்காக வாழ விரும்புகிறோம், எங்களுக்காக பிரிகிறோம், இதில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் இது எங்க பர்சனல் என பதிவு போட்டிருந்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அதிருப்திதையும் அதிகரித்தது.
இந்த நிலையில் அவர் சினிமா உலகிற்க்கு வந்த புதுசில் ஒரு நேர்காணலில், துள்ளூவதோ இளமை படப்பிடிப்பு விசாக பட்டினத்தில் நடைபெற்றதாகவும்,
அப்போது அங்கு கூட்டத்தில் இருந்த சிலர் யார் ஹீரோ என கேட்டபோது தனுஷை காட்டினார்களாம், அப்போது இவன்லாம் ஹீரோவா?
– Advertisement –
ஆட்டோ காரன், ரிக்ஷா காரன் கூட ஹீரோ தான் எனவும் அவரது உருவத்தை கேலி செய்து சிரித்தார்களாம் இதனால் வேதனை அடைந்த தனுஷ்.
காரில் அமர்ந்து தேம்பி அழுததுடன் அப்பா மீது அதிக கோபம் கொண்டாராம், அவரின் வற்புறுத்தல் தான் இப்படி கேவலப்படுறோம் என ஆத்திரபட்டாரம்.

நான் படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் என் அப்பா தான் ரொம்ப வற்புறுத்தி நடிக்க வைச்சார் அவர் என்னை ஏமாத்திட்டார்ன்னு நினைச்சேன் என பகிர்ந்து கொண்ட வீடியோ அதிக வைரல் ஆகி வருகிறது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.