பிரபல நியூஸ் ரீடர் கண்மணி தனக்கு சீரியல், சினிமா படங்கள் என வாய்ப்புகள் வந்தாலும் தட்டிக் கழித்து வருவதாக அளித்துள்ள பேட்டி வைரல் ஆகிவருகிறது.

– Advertisement –


சன் டிவியில் பிரபல செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் கண்மணி திருவள்ளூரை பூர்வீகமாக கொண்டவர். அந்த ஊர் தலைவரின் செல்ல மகள்.

சமீபத்தில் கண்மணி அளித்து உள்ள நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார், அதில் முதன் முதலாக ஊரை விட்டு படிக்க வந்தார் எனவும், முதலில் ஜெயா டிவியில் தான் வேலைக்கு சேர்ந்து பணியை கற்றுக் கொண்டாராம், பின்னர் பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்ததாம்.

kanmani sekar

வேலை இடத்தில் வரும் பிரச்சனையை கொஞ்சமும் எதிர்ப் பார்க்காத கண்மனி, அவ்வ போது ஊருக்கு ஓடி விடுவாராம். பிரச்சினைகளை எதிர்க் கொள்ள தைரிதம் இல்லாமல் இருந்தாராம், இப்பவும் கொஞ்சம் அப்படி தான் இருப்பதா தெரிவித்த கண்மணி.

நான் என் சேனலுக்கு பயந்ததை விட அப்பாக்கு தான் அதிகமாக பயப்படுவேன் எனவும் ஒவ்வொரு நாளும் நான் செய்தி வாசிப்பதை தவறாமல் அப்பா பார்ப்பார்.

– Advertisement –


என்னிடம் உள்ளா நிறை குறைகளை நேர்த்தியாக விமர்சிக்கவும், தட்டி கொடுக்கவும், பாராட்டவும் என் அப்பா அளவிற்கு யாரும் இல்லை என்றவர்.

சமீபத்தில் அதிக சினிமா படங்கள் மற்றும் சீரியல்களில் வாய்ப்பு தேடி வருவதாகவும், நான் தான் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

kanmani sekar

நான் மீடியா வேலைக்காக ஆசைப்பட்டு வந்தேன் ஊரில் பலருக்கு நான் முன் உதாரணமாக இருப்பதாக என் பெற்றோர் பூரித்து போயிருக்காங்க எனக்கு இதுவே போதும்.

என நியூஸ் ரீடர் கண்மணி சமீபத்தில் பேசிய நேர்காணல் தற்போது இணையத்தில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்று உள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: