சன் டிவியில் அமோக வரவேற்ப்புடன் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பூவே உனக்காக தொடர்.
– Advertisement –
தற்போது வரும் சீரியலுக்கு பெரும்பாலும் தமிழ் சினிமா படங்கலீன் பெயர்கள் தான் அதிகமாக வைக்கபடுகிறது, பூவே உனக்காக, செந்தூர பூவே, ராஜா ராணி, ரோஜா என்பன அவற்றில் சில.
அந்த வகையில் கொரானா லாக்டவுனில் கடந்த 2020-ல் துவங்கி இன்று வரை சுமார் 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் பூவே உனக்காக சீரியல்.

ராதிகா பிரீத்தி நாயகியாகவும் வருண் நாயகனாகவும் தேவிப் பிரியா, சாயா சிங் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
அதில் வருண் சமீபத்தில் விலகியதை அடுத்து அசீம் அந்த ரோலுக்கு நடிக்க ஒப்பந்தமானார். சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பகல் நிலவு, பிரியமானவள் உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் அசீம்.
– Advertisement –
பிக் பாஸ் பிரபலம் சிவானியுடன் ஜோடியாக நடித்து அதிக பிரபலமானவர், அவருடன் திருமணம் என அதிகமாக கிசு கிசுக்கபட்டவரும் கூட. அசீம் பூவே உனக்காக தொடரில் ஒப்பந்தமானதை அடுத்து டி ஆர் பி இன்னும் அதிகமாக உயர தொடங்கியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் அசீம்.
இந்த நிலையில் தான் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாக நாயகி ரோலில் நடிக்கும் ராதிகா பிரீத்தி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா, அப்பா இராணுவ வீரர் என் வாழ் நாளில் 2 படங்கள் மட்டுமே பார்த்து இருக்கேன் அவ்வளவு ஸ்டிர்க்ட்.
அம்மா துணையுடன் சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்டே படிக்கும் போது போட்டோ ஷீட் என பிளான் பண்ணி தான் முயற்சி செய்தேன்.
அதற்க்கு ஏற்றது போல கன்னட பட வாய்ப்பும் கிடைத்தது ஆனால் சில காரணங்களால் அந்த படம் கை கூட வில்லை.
– Advertisement –
தமிழ் படம் ஒன்றிலும் வாய்ப்பு கிடைத்து அதுவும் கை நழுவிப் போனதாலும் விரக்தியிலும், நண்பர்கள் கேலியால் வேதனையில் இருந்ததாகவும் தெரிவித்த ராதிகா.
அம்மா வற்புறுத்தல் காரணமாக தான் பூவே உனக்காக ஆடிசனுக்கு வந்ததாகவும், ஏடாகூடமாக நடந்து கொண்டால் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து ஓவராக வம்பு பண்ணதாகவும் கூறியுள்ளார்.

இருந்தாலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க ஆச்சரியத்தில் ஆழ்ந்த ராதிகா ஆரம்பத்தில் அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக தான் ஒத்துக் கொண்டதாகவும்,
பின்னர் அந்த தொடரில் ராதிகாவுக்கு கிடைத்த அமோக வரவேற்பு காரணமாகவும் அதையே அதிக விருப்பத்துடன் செய்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

மேலும் என் அம்மா மட்டும் உனக்கு இது சரியாக வரலன்னா விட்ருன்னு சொல்லிருந்தா இன்னைக்கு பூவரசியால நின்று இருக்க முடியாது எனவும் கூறியவர்.
தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் சன் டிவியில் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாலவும் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.