தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து! விவகாரத்தை அறிவித்த நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. மிக சாதாரண படங்களில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை உயர்ந்தவர் தனுஷ்.

அவரின் மாமனாரான ரஜினிகாந்தும் அப்படி தான். இரு மகள்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் பெயரில் காதல் திருமணம் புரிய அனுமதி அளித்தார் சூப்பர்ஸ்டார்.

தனக்கு நன்றாக ஆங்கிலம் பேச கற்று கொடுத்தவர் தனது மனைவி ஐஸ்வர்யா என்றும் கூறுவார் தனுஷ். ஐஸ்வர்யா இயக்கத்தில் மூன்று என்ற படமும் திருமணம் ஆன சில வருடங்களில் நடித்தார்.

அப்பொழுது அவருடன் நடித்த ஸ்ருதி ஹாசன், அமலா பால் பின்னர் சுச்சி லீக்ஸ் வாயிலாக திரிஷா என்ற பல நடிகைகளுடன் ஒப்பிட்டு கிசு கிசு வந்த வண்ணம் இருந்தது. இதற்கெல்லாம் இரு தரப்பிலும் மௌனம் சாதித்தாலும், வந்த புகை அடங்கவில்லை.

இவருடன் நடித்த கதாநாயகிகளுக்கு தான் விவாகரத்து ஆகிறது என்றால் இவரின் கொழுந்தியலான சௌந்தர்யாவுக்கும் இதே நடக்க, கோலிவுட் வட்டாரம் சும்மா இருக்கவில்லை.

மிகவும் துணிச்சலும் அமைதியுடனும் சூப்பர்ஸ்டாரின் இரண்டாம் மகள் சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். அதனை அனைவரும் பாராட்டினார்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, தீடிரென இருவரும் சமந்தா சேய் போல் பெயர் மற்றும் மாற்றி ஒரே மாற்றி ட்வீட் செய்துள்ளனர், அதில் தங்களின் 18 வருட பயணம் நிறைவடைந்து தாங்கள் பிரிகிறோம் என்று குறிப்பிட்டனர்.

இதனை பற்றி கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்ததில், இருவரில் ஒருவருக்கு விரைவில் மறுமணம் நாடகவிருப்பதாகவும், இதுவே இந்த பிரிவின் முக்கிய காரணம் என்றும் கூறினார்.

எதற்கும் குறையில்லாமல் அதிர்ஷத்தில் வளர்ந்தவர் தனுஷ். தனக்கு நல்லது செய்தவருக்கெல்லாம் நன்றி கடன் செய்தவர்.

அது பவர் பாண்டியாக இருக்கட்டும் அல்லது அம்மாவின் கணக்காக இருக்கட்டும். சூப்பர்ஸ்டாரை வைத்தே படம் எடுக்கும் அளவிற்கு பணமும் சம்பாதித்தவர்.

குடும்ப பந்தத்தில் மற்றும் தோல்வியுற்றா என்று காலம் மாத்திரம் தான் பதில் சொல்ல முடியும். இரு மகள்களின் சந்தோஷத்தை பெரிதாக பார்க்கும் சூப்பர்ஸ்டாரிற்கு நமது அனுதாபங்கள்.

Categorized in: