நடிகர் தனுஷ் விவாகரத்து சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் இரண்டாவதாக அவர் இளம் பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– Advertisement –
நடிகர் தனுஷின் இயற் பெயர் சரவணன் சினிமாவுக்காக தனுஷ் என பெயர் மாற்றம் செய்துக் கொண்டார். அவரது முதல் படம் 2000 களில் வெளியான துள்ளுவதோ இளமை.
ஷெரின், சுதீப் என பலர் தனுஷீடன் இணைந்து நடித்தனர், பின்னர் காதல் கொண்டேன் அவரது சொந்த அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார்.
தொடர்ந்து பொல்லாதவன், படிக்காதவன், புதுப்பேட்டை, அசுரன் என அடுத்து தனுஷ் தொட்டதெல்லாம் வெற்றி தான்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா வை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ்.
ஐஸ்வர்யா திருமணத்திற்கு முன்னர் டாக்டர் எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக துறையில் பணிப் புரிந்து கொண்டிருந்தார்.
– Advertisement –
திருமணம் ஆகி 18 வருடங்களை கடந்த இந்த காதல் தம்பதிகளுக்கு யாத்திரா, லிங்கா என்ற இரண்டு செல்ல மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 18 வருடம் காதலர்களாக, நண்பர்களாக, பெற்றோர்கள் என வாழ்ந்து விட்டோம்.
அடுத்தகட்டமாக நாங்கள் எங்களுக்காக வாழ விரும்புகிறோம், எங்களுக்காக பிரிகிறோம், இதில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் இது எங்க பர்சனல் என பதிவு போட்டிருந்தார்.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அதிருப்திதையும் அதிகரித்தது.
– Advertisement –
இந்த நிலையில் தான் நடிகர் தனுஷ் இளம் பெண் ஒருவருடன் ஹைதராபாத் ரெசார்ட்டில் சாப்பிடுவது போன்ற போட்டோக்கள் வெளியாகி உள்ளது.
அந்த புகைபிடத்தில் இருப்பவர் வேறு யாரும் இல்லைங்க தனுஷின் உடை வடிவமைப்பாளராம். அவர் தற்போது நானே வருவேன் படபிடிப்பு தளத்தில் இருப்பதால் உணவுக்காக வெளியில் வந்துள்ளார்.
மேலும் தனுஷ் மாறன், திரு சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட தமிழ் படத்திலும் தி கிரேட் மேன் எனும் ஹாலிவுட் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.