ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரபலமான சசிகலா பெண் குழந்தைக்கு அம்மாவான செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கேப்டன் டிவி, கலைஞர் டிவி என தொகுப்பாளராக கெரியரை துவங்கிய சசிகலா நாகராஜன் காலப்போக்கில் கடின உழைப்பினால் சின்னத்திரைக்கு வந்தார்.
சன் டிவியில் குல தெய்வம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சசிகலாவுக்கு நல்ல ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.
அதனை அடுத்து ஜீ தமிழில் யாரடி நீ மோகினி, என்றென்றும் புன்னகை என அடுத்தடுத்து நல்ல சீரியல்களில் நடித்து வருகிறார் சசிகலா.
இந்த நிலையில் சமீபத்தில் சசிகலா நாகராஜன் காதல் கணவரான பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், பிறகு கர்ப்பமான விஷயத் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுக்கு அறிவித்தார்.
கர்ப்பவதியாக இருந்தாலும் தொடர்ந்து நடித்து வந்த சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சின்ன பிரேக் எடுத்தார்.
தனது நண்பர்களுடன் கேக் வெட்டி தாய்மையை கொண்டாடிய சசிகலாவிற்க்கு தற்போது பெண் குழந்த்கை பிறந்துள்ளாதாக அவர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.