தளபதி விஜய் உடன் பைரவா படத்தில் இணைந்து நடித்தவர் ஹரிஷ் உத்தமன் இரண்டாவது திருமணம் செய்துள்ள படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஹரிஷ் உத்தமன் தா படம் மூலமாக தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமானார். அதனை அடுத்து பைரவா, றெக்க, டோரா என பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் தமிழ் மட்டும் அல்லாமல், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆண்டு மேக்கப் ஆர்டிஸ்ட் அம்ரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் பின்னர் ஏற்ப்பட்ட கசப்பு காரணமாக பிரிந்தனர்.
திருமணம் ஆன ஒரே வருடத்தில் மன கசப்பு காரணமாக அடுத்த ஆண்டே விவாகரத்து பெற்ற ஹரிஸ் உத்தமன். தொடர்ந்து நடிப்பில் கவனமாக இருந்தார்.
மலையாளத்தில் பகத் பாரிஸ் நடிப்பில் வெளியான நார்த் 24 காதம், மம்முடியின் காஸபா உள்ளிட்ட படங்கள் மூலமாக பிரபலமானவர் சின்னு குரூலா.

அவரை காதலித்து வருவதாக மலையாள மீடியாவிடம் அறிவித்த ஹரிஸ் குரூலாசை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் செய்துக் கொண்டார். சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக முக்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சிறப்பு திருமண சட்டம் அதாவது மத சார்பற்ற முறையில் திருமணம் செய்து கொண்ட ஹரீஸ் – குரூலா வுக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.