நடிகை ஷீலா திரெளபதி படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரிச்சர்ட் உடன் மெயின் லீடாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.

இதனை தொடர்ந்து யோகி பாபுவுடன் இணைந்து மண்டேலா படத்தில் நடித்துள்ளார். பெரும் சர்ச்சைகளை கிளப்பிய இந்த படம் ஆஸ்காருக்க்ய் பரிந்துரைக்கபட்டதும் குறிப்பிடதக்கது.

Actress Sheela Rajkumar

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள், நிறம் மாறாத பூக்கள் என அவர் நடித்த சீரியல் மூலமாக மேலும் பிரபலமானார். இதன் மூலமாக இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர் இயக்குநர் ஒருவரை காதலித்து நடுகடலில் திருமணம் செய்து கொண்டார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சி பிரபலம் தம்பி சோழன் என்பவரை அவரது குறும் படத்தில் நடிக்கும் போது காதலித்த ஷீலா.

Actress Sheela Rajkumar

சில மாதங்களுக்கு முன்பாக நடுகடலில் படகில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட புகைபடங்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இரு வீட்டின் பெற்றோர்களும் ஷீலா திருமணத்திற்க்கு ஒப்புதல் வழங்காத காரணத்தினால் அவர்கள் எதிர்த்து திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடதக்கது.

Categorized in: