நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறிய நபரை திருமணம் செய்து பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளார்.
நடிகையும் மாடலுமான பிரியங்கா சோப்ரா கடந்த 2000 ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்று மாடலாக இருந்தவர். பின்னர் 2002 ல் தளபதியுடன் தமிழன் படத்தில் ஜோடியாக நடித்தார் அவரது தமிழ் படம் முதலும் கடைசியும் அது தான்.
பிறகு பாலிவுட்டில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்த்ஜ பிரியங்கா தற்போது ஹாலிவுட், வெப் சீரீஸ் என செம பிசியாக இருக்கிறார்.
கடந்த 2018 ஆண்டில் நிக் ஜோனஸ் என்பவருடன் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திரும செய்து கொண்டார் பிரியங்க நெருக்கமான சிலர் மட்டுமே அதில் பங்கேற்றனர்.
இதனை அடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த பிரியங்கா நிக் காதல் ஜோடிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளனர்.
பிரியங்கா வாடகை தாய் மூலமாக தான் பெண் குழந்தையை பெற்று எடுத்துள்ளத்காகவும் நாங்கள் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறோம்.
இது எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் சுதந்திரமாக இருக்க நினைக்கிறேன் இது குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் பதிவிட்டு உள்ளார்.
இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகை பீரித்தி சிந்தா, ஷில்பா ஷெட்டி என சிலர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.