நடிகை பாவனி லைவில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை பாவனி சன் டிவியில் வெளியான பாசமலர் சீரியலில் முதலில் நடித்தார். பின்பு விஜய் டிவியில் சின்னதம்பி இந்த தொடர் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
பிறகு தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்தார் பாவனி. வஜ்ரம் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார். பிறகு தன்னுடன் நடித்து வந்த பிரதீப் என்பவரை காதலித்து வந்த பாவனி பெற்றோர் சம்மதிக்காமல் போனாலும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த காதல் திருமணத்தில் போக போக பிரச்சனை தலை தூக்க கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படைதாக பேசினார். தொடந்து அபிநய் உடன் நெருக்கமாக பழகியதாக எழுந்த சர்ச்சைக்கும் ஆளானார். பிறகு வைல்கார்டு போட்டியாளராக வந்த அமீர் உடன் இணக்கம் காட்டி வந்த பாவனியை காதலிப்பதாக அமிர் வெளிப்படையாக பேசினார்.
இதனை தாண்டி பிக்பாஸ் முடிவில் மூன்றாவது இடத்தை பிடித்த பாவனி வாரத்திற்கு 1.25 லட்சம் ரூ என்ற வீதத்தில் சுமார் 19 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்.
இந்த நிலையில் தான் பாவனி வழக்கம் போல வந்த லைவில் ரசிகர் ஒருவர் கல்யாணம் எப்போ என்ற கேள்வி கேட்க, தனக்கு இனி திருமணமே இல்லை எனவும் நடிப்பில் தான் முழு கவனத்தையும் செலுத்த உள்ளாதாகவும் அவர் அளித்த பதில் வைரல் ஆகிவருகிறது.