பாலிவுட்டின் இரண்டு நட்சத்திர நடிகர்கள் இரகசியமாக சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

– Advertisement –


நடிகர் ஹிரித்திக் ரோஷன் பாலிவுட்டின் உட்ச நட்சத்திரமாக திகழ்பவர் மேலும் உலகின் வசீகரமான முகத்தை கொண்டவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

அவர் 14 வருடங்கள் காதல் மனைவியுடன் வாழ்ந்த நிலையில் கடந்த 2014 ல் அவரது மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

சினிமா துறையில் நடிகர்கள் விவாகரத்து சகஜம் தான் என்றாலும் பாலிவுட்டில் அது மிக சர்வ சாதாரணமாக நடக்க கூடிய விஷயம் தான்.

hrithik roshan saba azad

இந்த நிலையில் ஹிரித்திக் ரோஷன் கடந்த பல ஆண்டுகளாக சிங்கிளாகவே இருக்கிறார் என அவரது ரசிகர்கள் பலரும் அவரது அடுத்த திருமணத்தை எதிர்ப்பர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் ஹிரித்திக் ரோஷன் பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகையான சபா ஆசாத் என்பவருடன் காதலில் விழுந்ததாக சொல்ல்பட்டது.

– Advertisement –


கடந்த சில நாட்களுக்கு முன்னர் சபாவும் ஹிர்த்திக் ரோஷனும் நட்சத்திர விடுதியில் இருந்து கை கோர்த்தபடி வெளியே வந்த புகைப்படங்கள் அதிக வைரல் ஆனது.

சபா ஆசாத், தில் கபடி படம் மூலமாக தான் பாலிவுட்டில் அறிமுகமானார் அவருக்கு 32 வயதே ஆன நிலையில் கடைசியாக பீலிங்ஸ் ஆப் இஷ்க் என்ற படத்தில் நடித்து அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

hrithik roshan saba azad

இதற்கிடையில் ஹிர்த்திக் ரோஷன் சபா ஆசாத் உடன் நீண்ட வருடங்களாகவே காதல் உறவில் இருந்ததாகவும் அவர் நேரம் வரும் போது அதை அறிவிக்கலாம் என இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

ஹிர்த்திக் ரோஷன் சிங்கள் ஸ்டேடசில் இருந்து மீண்டும் மிங்கிள் ஆவது சந்தோசம் தான் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: