பட்டியல் இன மக்களை மோசமாக விமர்சித்த சூப்பர் மாடல் மீரா மிதுன் மீது சைபர் கிரைம் சார்பில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் மாடல் மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை மிக மோசமாக விமர்சித்து பதிவு போட்டிருந்தார்.
சினிமாவில் உள்ள தலித் டிரைக்டர் மற்றும் நடிகர்களை விரட்டி அடிக்க வேண்டும் அவர்கள் செய்யும் கேவலமான வேலைகள் தான் மற்றவர்களை தவறாக நினைக்க வைக்கிறது.
பாடகி தீ சந்தோஸ் நாராயணன் எனது முகத்தை காப்பி அடிப்பது ஏன் ? அவரது சொந்த முகத்தை காட்ட மறுப்பது எதற்க்கு என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த பதிவு சமூக வலை தளத்தில் பரவி பெரும் கண்டனத்தை பெற்ற நிலையில் விசிக எம் எல் ஏ வன்னியரசு மீரா மீது புகார் கொடுக்க அதனை சைபர் கிரைம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பட்டியலினத்தவரை அவமானபடுத்திய வகையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர் மீது சைபர் கிரைம் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியுள்ளது.