இயக்குநர் ஷங்கள் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போனவர், சாதராண காட்சிகளிலும் அவர் காட்டும் பிரம்மாண்டம் காண்பவரை பிரம்மிக்க வைக்கும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கமல் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிக்க இயக்குனர் ஷங்கள் ஒப்பந்தமான படம் தான் இந்தியன் 2 .
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பையும் , வரவேற்ப்பையும் பெற்ற இந்த படத்தை ஆரம்பித்த சில நாட்களிலேயே லைக்காவுக்கும் ஷங்கருக்கும் லேசான பனிப்போர் இருந்துள்ளது.
படத்தின் பட்ஜெட் துவங்கி சிக்கல்கள் ஆரம்பிக்க சொல்லி வைத்தது போல ஷீட்டிங் நடந்து கொண்டிருந்த பிரபல படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது.
அந்த சமயத்தில் பல விபத்துக்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் படக்குழு ஒருவரை ஒருவர் சாடி தப்பிக்க முயன்றனர். படமும் காலப்போக்கில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தான் தெலுங்கில் மாஸ் ஹீரோவான ராம் சரண் வைத்து ஷங்கர் படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானதால் கடுப்பான லைக்கா அவர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை ஆரம்பிக்க தடைக்கோரி வழக்கு போட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தடையை தர முடியாது என வழக்கை தள்ளுபடி செய்ய கடுப்பான லைக்கா மீண்டும் வழக்கில் மேல் குறையீடு செய்துள்ளது.
அதாவது தனி நீதிபதியின் உத்தரவின் நகல் வரவில்லை அதனை ஏற்காமல் வழக்கை விசாரிக்க லைக்கா கோரிக்கை வைக்க அதனை நீதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனால் விரைவில் எந்த பக்கமும் தீர்ப்பு வரலாம் எனினும் சங்கர் சமீபத்தில் தெலுங்கு படத்திற்க்கான பிரீ புரோடெக்ஷன் வேலைகளை துவங்கியதால் அதன் நிலை கேள்விக்குறியாக நிற்க்கிறது.