விஜய் தொலைக்காட்சி யில் மிக அமோக வரவேற்பு உடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.
– Advertisement –
சமீப காலமாக சினிமா படங்களின் பெயர்களை சீரியலுக்கும் வைத்து அதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வேலையை தொலைகாட்சி செய்து வருகிறது.
அந்த வகையில் ரோஜா, அக்னி நட்சத்திரம், என்றென்றும் புன்னகை, பூவே உனக்காக, வானத்தை போல என பல பெயர்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.
இது போல விஜய் தொலைக்காட்சி யில் வெளியாகி நல்ல டி ஆர் பி ரேடிங்கில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.

அந்த தொடரில் முக்கிய ரோலில் மிர்ச்சி செந்தில், காயத்திரி, ராஜீ, ரக்ஷிதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடர் வெற்றி கரமாக ஓடி வருகிறது.
இந்த நிலையில், சீரியலில் முக்கிய ரோலான ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வனிதா ஹரிகரன் மக்களிடையே இந்த தொடர் மூலமாக அதிக பிரபலமாகியுள்ளார்.
– Advertisement –
வனிதா ஏற்கனவே, பகல் நிலவு, ரோஜா உள்ளிட்ட பல மெகா சீரியல்களில் நடித்து இருந்தாலும் இந்த தொடரின் மூலமாக அதிக வரவேற்பைப் பெற்று உள்ளார்.
இவருக்கு சரவணன் என்பவருடன் சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் அவர் கர்ப்பமாகவும் இருந்தார் தொடரில் இருந்து விலகிய வனிதா.

கணவருடன் பெல்ஜியத்தில் வேலைப் பார்த்து வந்ததினால் வனிதா ஹரிகரன் அவருடன் இருந்து குழந்தையும் பெற்று எடுத்து உள்ளார்.
சமீபத்தில் தான் வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவரது குழந்தை உடன் எடுத்த போட்டோ ஷீட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.