நடிகை நயந்தாரா உடன் நீண்ட காதலில் இருந்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் சோசியல் மீடியாவில் போட பதிவு செம வைரல் ஆகி வருகிறது.

– Advertisement –


சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்கள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபடுவது சகஜம் தான் என்றாலும் நயந்தாரா க்கு இது சற்று அடுத்த நிலை.

அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நாள் முதலே தினம் ஒரு சர்ச்சை உடன் தான் கண் விழிக்க வேண்டியுள்ளது என அவரே ஒரு நேர்காணலில் பேசி இருந்தார்.

Nayanthara

நயந்தாராவின் முந்தைய காதல்கள் கசந்து விட நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டுமாக சினிமாவுக்கு வந்த நயனுக்கு ராஜா ராணி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

அதனை அடுத்து நானும் ரவுடி தான், இரு முகன், தனி ஒருவன், துவங்கி தற்போது அண்ணாத்த, நெற்றி கண் என தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் நயன்.

– Advertisement –


நானும் ரவுடி தான் படங்களை கொடுத்து செம ஹிட் கொடுத்த விக்னேஷ் சிவன். வலிமை மாஸ்டர் என பாடலாசிரியராகவும் உருவெடுத்து நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார்.

நயன் விக்னேஷ் காதலில் விழுந்து நீண்ட காலமானதால் அவர்கள் திருமணம் எப்போது என்ற கேள்வி சமூக வலைதளத்தில் அடிக்கடி ட்ரெண்டாகும்.

nayanthara vignesh shivan

ரவுடி பிக்ஸர்ஸ் மூலமாக காத்து வாக்குல இரண்டு காதல், ஊர் குருவி என அடுத்த கட்ட திட்டங்களை நேர்த்தியாக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘காத்துவாக்குல ஒரு காதல்’ என கேப்ஷன் போட்டு சுற்றியுள்ள அனைத்து அன்பர்களுக்கும் காதல் தின வாழ்த்துக்கள். காதல், அதுவே இந்த வாழ்க்கையை நிறைவு செய்கிறது.

எனவே காதலிக்கவும் மற்றும் நேசிக்க படுவதற்கும் நேரமும் ஆர்வமும் வேண்டும். காதலர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து கட்டித்தழுவி தன்னுடைய காதல் தின வாழ்த்துக்களை கூறும் வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: