காற்றுக்கு என்ன வேலி நடிகை பிரியங்கா சினிமாவில் நுழைந்து அவர் நடித்து வெளியாக உள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிதாகி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
– Advertisement –
விஜய் தொலைக்காட்சி யில் வெற்றிகரமாக வெளிதாகி நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் தான் காற்றுக்கு என்ன வேலி. இதில் சூர்யா மற்றும் பிரியங்கா லீடாக நடித்தனர்.
சமீபத்தில் கால் சீட்டினால் சூர்யாவுக்கும் சீரியல் குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டானதால் அவர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பிறகு பிரியங்கா தவிர பல முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீரியலில் இருந்து அடுத்தடுத்து விலகினர். இந்த நிலையில் தான் இவரும் விலகுவதாக கூறப்பட்டது.
இதனை பிரியங்காவும் மறுத்து பதிவிட்டு இருந்தார். இதற்கிடையில் பிரியங்கா நடிப்பில் வெளியாக உள்ள படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
– Advertisement –
பிரியங்கா கர்நாடக மாநிலம் மைசூரை பூர்வீகமாக கொண்டவர், ஆரம்பத்தில் மாடலிங் மூலமாக துவங்கியவர் பின்னர் கிருஷ்ணா துளசி என்ற தெலுங்கு தொடர் மூலம் அறிமுகமானார்.
பின்னர் சன் டிவியில் சாக்லேட் தொடரில் நடித்து வந்தார். தற்போது காற்றுக்கு என்ன வேலி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளார்.

இந்த நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவருடன் டியூக் பைக்கில் பிரியங்கா மாடல் உடையில் நெருக்கமாக அமர்ந்து இருக்கும் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.