பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் இருபரும் இணைந்து காதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக இறக்கிய பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

– Advertisement –


பிக் பாஸ் சீசன் 3 ல் வந்த இலங்கை வாழ் தமிழ் பெண் லாஸ்லியா ஆரம்பத்தில் கியூட் பப்ளியாக ஜெனிலியா போல சுற்றி வந்த லாஸ்லியா.

கால போக்கில் வீட்டின் சக போட்டியாளர்களிடம் இருந்து அவ்வபோது வேறுபட்டும் முரண்பட்டும் நின்றார். கவினுடன் மலர்ந்த காதல் தான் அவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது.

Losliya

பிறகு கவினுக்காக சேரன் அப்பாவையும் எதிர்த்து நின்றார் அவரது அப்பா மரியனேசன் வந்து விலாசிய பின்னர் கவினிடம் இருந்து விலகியவர் இன்று வரை வாய்த்திறக்கவில்லை.

பிறகு ஆக்‌ஷன் கிங் அர்ஜீன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் படம் நடித்தார் அது வெளியாகியதை அடுத்து தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார்.

– Advertisement –


குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னரும் தனக்கென தனி பெண் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அஸ்வின். அவர் முன்பாக சில பிராஜக்ட்களில் வேலை பார்த்து இருந்தார்.

இருந்தாலும் குக்வித் கோமாளி அவருக்கான இடத்தை மக்களிடத்தில் தட்டி தூக்க உதவியது எனலாம். அந்த வகையில் அவரும் வெப் சீரிஸ், சிங்கிள் டிராக் என பிசியாக இருக்கிறார்.

ashwin losliya Single

இதற்கிடையில் அவரது என்ன சொல்ல போகிறாய் படம் புகழுடன் நடித்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று கொடுத்தது அனைவரும் அறிந்து விஷயம் தான்.

இந்த நிலையில், அஷ்வின் – லாஸ்லியா இணைந்து யூடியூபில் சுகர் பேபி என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளனர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று உள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: