பாகிஸ்தான் பிரதமர் பங்களா இனி வாடகைக்கு ! நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்..
பாக்கிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி அரசு பங்களாக்களை இனி வாடகைக்கு கொடுக்கவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளதாம்.
பொதுவால ஒரு நாட்டின் நிதி நிலைமை கால நிலைக்கு ஏற்ப வேறுபடும், அதிலும் தற்போது தொற்றுக் காரணமாக பல நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கியுள்ளது.
இந்த வரிசையில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாம் அண்டை நாடான பாக்கிஸ்த்தான், அந்த நாட்டின் டாலர் மதிப்பு சுமார் 150 ரூ வரை சரிந்ததும், பட்ஜெட்டில் 1800 கோடி துண்டு விழுந்த காரணத்தினாலும் தான் இந்த்ஜ நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாம்.
நிதி நிலைதான் மோசமாக உள்ளதே சரி உலக நாடுகளிடம் கடனாவது வாங்கலாம் என்றால் அதற்க்கும் ஐ.எம்.எப் அதாவது சர்வதேச நிதியமானம் தயக்கம் காட்டி வருகிறது எனவும் ஒரு வகையில் இதற்க்கு பிரான்ஸ் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் தள்ளபட்டதும் முன்னனி நிறுவனங்கள் உற்பத்தி குறைவதால் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளதை அடுத்து நெருக்கடியை சமாளிப்பதற்க்காக ,
அந்த நாட்டின் அரசு பிரதமர் இம்ரான் கான், ஆளுநர் உள்ளிட்ட அரசின் உயரிய பதவிகளை வகிக்கும் நபர்களுக்கான சொகுசு பங்களாக்களை திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அந்த நாட்டின் ராணுவ அதிகாரியின் மகள் திருமணம் பிரதமர் சொகுசு பங்களாவில் நடைபெற்றதும், அதற்க்கு பிரதமர் இம்ரான் கான் வருகை தந்ததும் குறிப்பிடதக்கது.