நகைச்சுவை நடிகர் வடிவேலு எலி படத்தில் வங்கி காசளரிடம் கொள்ளை அடிக்க வந்ததை நாசுக்காக எழுதி கொடுத்துவிட்டு நிற்ப்பார் அவர் ஸ்பெல்லிங் மிஸ்டெக்சை சரி செய்ய சொல்லி அனுப்புவார்.
அதே போல ஒரு சம்பவம் வெளிநாட்டிலும் நடந்து பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் ஆலன் ஸ்லாட்டரி என்ற 67 வயது மதிக்கதக்க தாத்தா செய்த காரியம் பேசு பொருளாகியுள்ளது.
இங்கிலாந்தில் சூசக்ஸ் பகுதியை சேர்ந்த ஆலன் அங்குள்ள ஸ்டாடிகா வங்கியில் திருவதிற்க்காக திட்டம் போட்டு ஒரு பேப்பரில் அதை எழுதி வங்கியின் காசாளரிடம் கொடுத்துள்ளார்.
அவரது கையெழுத்து புரியாத காரணத்தினால் தாத்தா திருத்தி எழுத சொல்லி காசாளர் திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் அதை சிரமப்பட்டு படிக்க முயன்றுள்ளதில் புரிந்து கொண்டார்.

இது குறித்து போலீசில் புகாரும் அளித்தார், அதனை தொடர்ந்த்ஜு மற்றொரு வங்கியில் பெண் காசாளரை மிரட்டி 3 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்த ஆலன் தாத்தா.
அடுத்தகட்டமாக மூன்றாவது சமவத்துக்கு மற்றொரு வங்கிக்குள் அதே லெட்டரை நீட்ட காசாளர் துணிச்சலோடு முடிஞ்சத பண்ணிக்கன்னு திரும்ப அனுப்பிட்டு போலீசுக்கும் புகார் அளித்ததை அடுத்து ஆலன் தாத்தா வை லாவகமாக பிடித்தது போலீஸ்.