தமிழகத்தில் முதல் முறை முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களை பற்றி நமக்கு தெரியாதது பல உண்டு.
அது போல் இரு தினங்களாக அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் நடந்து வரும் ஜல்லிக்கட்டை தமிழகமெங்கும், ஏன் உலகமெங்கும் கண்டு ரசித்து வருகின்றனர். அதில் தொகுத்து வழங்கினவரின் நகைச்சுவை உணர்வும், தெளிவும் மிக பெரிய காரணம்.
அந்த வரிசையில் இரண்டாம் நாள் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் PTR, மாவட்ட ஆட்சியாளர் Anish கோடி அசைத்து தொடங்கி வைத்தனர். சுமார் 700 மேற்பட்ட காளைகள் வந்தன. அந்த போட்டியின் முதற் பரிசாக கார் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மாடு பிடி வீரர்களும் காளைகளும் சீற்றத்துடன் பங்கேற்றனர்.
நடப்பை அறிவித்து கொண்டிருந்தவர் தீடிரென ஆச்சிரியம் படும் படி கூறினார் “முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மாடு” அடுத்து வருகிறது என்றார்! முதல்வர் காளை வளர்க்கிறார் என்பதும் அது ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுப்பியுள்ளார் என்பதும் நல்ல பழக்கத்தின் பெருமிதமாக உள்ளது.
MLA உதயநிதி ஸ்டாலின் நேற்று அவனியாபுர ஜல்லிக்கட்டை பார்வையிட வந்திருந்தார், மறுநாளே தங்கள் வீட்டு மாட்டை களத்திற்கு அனுப்பி வைத்தது போது மக்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரி, எல்லாம் போகட்டும் முதல்வரின் காளையை யார் அடக்கியது என்பது தானே உங்கள் கேள்வி!? யாராலும் அடக்க முடியவில்லை! வளர்த்தியும் எந்த நேரத்திலும் திரும்ப தயாராக களத்தை சுற்றி ஜம்பமாக பார்த்த காளை, வடிவாசலை தாண்டி ஓட மட்டும் தயாராக வரவில்லை, திரும்பவும் தான்!
நல்ல சிரமப்பட்டு அவர் மாட்டினை வளர்த்தது தெரிந்து. வெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்துடன் நிற்காமல், அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வானை நமது கலாச்சாரம் காக்கும் வகையில் பின்பற்றியது, எதிர்க்கட்சி காரர்களிடமும் நன் மதிப்பை பெற்றது.
மாட்டை அழைத்து செல்ல வேலையாட்கள் ஒருவர் களத்திற்கு வந்து உடன் அழைத்து சென்றார். பின்னர் தொடர்ந்து நடந்தது ஜல்லிக்கட்டு, முதலாவதாக வந்த மாட்டிற்கு கார் ஒன்று பரிசாக கிடைத்தது.