பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி’ தொடர்ந்து இரண்டு சீசன்கள் அடுத்தடுத்து வெளியாகி,

ரசிகர்களின் மொத்த ஆதரவையும் பெற்று டி.ஆர்.பி யில் டாப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான சமையல் நிகழ்ச்சியாக இல்லாமல் சமைக்கும் குக்கு மற்றும் கோமாளிகளுக்கு டாஸ்க்குகள் கொடுக்கபடும், டாஸ்க்குடன் சேர்ந்து சமைப்பது தான் அந்த நிகழ்ச்சியின் கான்சப்ட்.

சமையலுடன் இடையில் நடக்கும் காமெடி டிராக்குகளுக்கென பிரத்தியேக ரசிகர்கள் இருப்பது தான் சுவாரஸ்யமான விஷயம்.

cook with comali 3

இந்த நிலையில் தான் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 வெளிவர உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரமோ வெளியான நிலையில்,அதில் வழக்கமாக மணிமேகலை, ஷிவாங்கி ,பாலா என பலர் இடம்பெற்றனர்.

அதில் புகழ் வருவாரா ? என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இதற்கிடையே செப் தாமு ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக கமெண்ட் போட்டுள்ளார்.

cook with comali 3 Pugazh


அதில் புகழ் 100% உண்மையாக வருவார் என அவரது பதில் ரசிகர்கள் பலரையும் குஷியில் ஆழ்த்தியுள்ளாது.

புகழ் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கு பெற்று வந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் அவருக்கான ரசிகர்களை அதிகமாக அள்ளிக் கொடுத்தது எனலாம்.

புகழ் தல அஜித் உடன் வலிமை படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் ஏறிய நிலையில் குக் வித் கோமாளி வருவாரா என்ற கேள்வியும், அவர் இல்லைன்னா நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்காதே எனவும் பல ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் இந்த பதிவ அவர்களுக்கு செம்ம டிரீட் வைத்துள்ளது.

Categorized in: