குக்வித் கோமாளி சீசன் 3 வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது இதில் பல புகு முகங்கள் கோமாளிகளாக இருந்து வரும் நிலையில் ஒருவருக்கு மட்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி’ தொடர்ந்து இரண்டு சீசன்கள் அடுத்தடுத்து வெளியாகி,

Cook with Comali Barath

ரசிகர்களின் மொத்த ஆதரவையும் பெற்று டி.ஆர்.பி யில் டாப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 வெளிவர உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரமோ வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டியது.

புகழ் வருவாரா? என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இதற்கிடையே செப் தாமு ரசிகர்களின் கேள்விக்கு வருவார் எனவும் பதில் அளித்து இருந்தார்.

Cook with Comali Barath

ஆனால் சில தினங்களுக்கு முன்பாக ஒளிபரப்பான குக்வித் கோமாளி எபிசோடில் புகழ் வர வில்லை மேலும் அவர் கெஸ்ட் அப்பியரன்சராக அடிக்கடி வருவார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பாலா, சிவாங்கி என சிலர் இருக்க புதிதாக சூப்பர் சிங்கர் பரத், குரேஷி, மூக்குத்தி முருகன் என பல கோமாளிகள் வந்துள்ளனர்.

கோமாளி பரத் புகழை போல இமிட்டேட் செய்து பரத் ஆடியன்ஸை காண்டாக்கி வருவதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Cook with Comali Barath

கோமாளி பரத் செய்வது நகைச்சுவையாக இல்லை கடுப்பாக தான் உள்ளது பரத்தை நீக்கி விட்டு சரத், தங்கதுரை யாராவது போடுங்கப்பா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categorized in: