புஷ்பா படத்தில் நடித்த நடிகை அனுசுயா பரத்வாஜ் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பகிர்ந்துள்ள போட்டோவால் ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.
– Advertisement –
நடிகை அனுசுயா பரத்வாஜ் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்குள் கடின உழைப்பினால் நுழைந்து பல வெற்றிகளை சொந்தமாக்கியுள்ளார்.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும், அல்லு அர்ஜீன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சமீபத்தில் வெளியானது ‘புஷ்பா’ திரைப்படம்.
இதில் சமந்தா ஆடிய ஆட்டம் மற்ற பாடல்களை பின்னுக்கு தள்ளி செக்க போடு போட்டு வரும் நிலையில், அந்த பாடலை ரசிகர்கள் தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு வந்தனர்.
இந்த படத்தில் வில்லனுக்கு மனைவியாக வரும் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார் நடிகை அனுசுயா இதற்காக பலரிடம் பாரட்டுகளையும் பெற்று வருகிறார்.
– Advertisement –
தற்போது கர்ப்பமாக இருக்கும் அனுசுயா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடிதார் டாப்பை தூக்கிய நிலையில் வயிறு தெரிய போஸ் கொடுக்கும் காட்சியால் சர்ச்சை கிளம்பியது.
கர்ப்பமாக இருக்கும் பெண் செய்கிற வேலையா இது அநாகரீகமாக நடந்து கொள்ளாதீங்க என ரசிகர்கள் பலரும் அவரை திட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இது அவரது பழைய படத்திற்க்காக எடுக்கபட்ட போட்டோ என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அனுசுயா எதுவும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.