நடிகை ஆல்யா மானசா தனது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக உள்ள நிலையில் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போகிறார் என பதில் அளித்துள்ளார்.
– Advertisement –
நடிகை ஆல்யா மானசா சின்னத்திரை மூலமாக பிரபலமானவர் விஜய் தொலைக்காட்சி தொடர் ராஜா ராணியில் நடித்து வந்தார்.
அதில் செம்பா என்ற பெயரில் வேலை செய்யும் பெண்ணாக வந்த ஆல்யாவுக்கு சஞ்சீவ் ஜோடியாக நடித்தார் அவர் வீட்டின் முதலாளி மகன். பணக்கார வீட்டு பையன் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின்பு நடக்கும் பிரச்சனைகள் தான் கதை களம்.
இந்த சீரியல் அதிக விமர்சையாக சென்றதை அடுத்து மக்கல் மத்தியிலும் அதிகமான வரவேற்ய் கிடைத்தது. டி ஆர் பி யும் உச்சத்தில் இருந்தது.
– Advertisement –
இந்த பழக்கம் கால போக்கில் ஆல்யா மானசா சஞ்சீவ் இடையே காதலாக மாற வெளிப்படையாகவே அவர்களது காதலை அறிவித்து கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக எளிமையாக வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானாசாவுக்கு அடுத்த ஆண்டே மகள் பிறந்தது.
இரண்டு வயதாகும் மகளுக்கு அடுத்து சிறிது இடை வெளிக்கு பின்னர் மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் சித்துவுடன் ஜோடியாக நடித்து வருகிறார் ஆல்யா.
சஞ்சீவும் சன் டிவியில் கயல் தொடரில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஆல்யா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளார்.
– Advertisement –
இது குறித்து கணவர் சஞ்சீவ் அறிவித்த போது ஆல்யாவுக்கு 3 மாதம் ஆன நிலையில் தற்போது ஐந்தாவது மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே ஆல்யான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னிடம் கேட்க ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள் என பதிவிட்டு இருந்தார்.
அதற்கு அவரது டெலிவரி தேதி குறித்தும் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க போறாங்க எனவும் ரசிகர் ஒருவர் கேள்வி ஏட்டு இருந்தார்.
அதற்கு பதில் அளித்த ஆல்யா மானசா மகளாக இருந்தார் லைலா எனவும் மகனாக இருந்தால் ஆர்ஷ் எனவும் குறிப்பிட்டு உள்ளார் இந்த தகவல் சமூக வலைதளத்தில் அதிக வைரல் ஆகி வருகிறது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.