பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் அமோகமான வரவேற்பைப் பெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக பிக் பாஸ் அல்டிமேட் துவங்கியது.
– Advertisement –
கடந்த ஜனவரி 31 தேதி முதல் துவங்கிய பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னி ஹாஸ்டாரில் 24/7 லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதில் முந்தைய சீசன்களில் இருந்த சினேகன், வனிதா, அபிராமி, நிரூப், ஷன்ம் செட்டி , பாலாஜி முருகதாஸ் என பலர் இடம் பெற்றுள்ளனர்.

சென்ற சீசனில் இழந்தவற்றை இந்த சீசனில் பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லா போட்டியாளர்களும் விளையாடி வருகின்றனர்.
இதில் தற்போது பாலாஜி சனம் ஷெட்டி இடையிலான அஜஸ்மண்ட் சர்ச்சை தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
– Advertisement –
கடந்த எபிசோடில் பத்திரிக்கையாளர் சந்திப்பு டாஸ்க் நடந்தது, அதில் போட்டியாளரிடம் சக போட்டியாளர்கள் அவர்களை குறித்த கேள்விகளை பத்திரிக்கையாளராக கேட்கலாம்.
அதன்படி, அபிராமி கேட்ட கேட்ட சனம் ஷெட்டி – பாலாஜி இடையிலான அஜஸ்மெண்ட் சர்ச்சை தான் தற்போது அதிக சூடுப் பிடித்துள்ளது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த பாலாஜி முருகதாஸ் கடந்த 2020 நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில், என் சாதனைகளை குறித்து பேசும் போது நான் பல டுபாக்கூர் நிகழ்ச்சிகளை சந்தித்தாகவும்,
ஆனால் நான் பெற்ற மிஸ்டர் இந்தியா பியூட்டி பேஜண்ட் அப்படி டுபாக்கூர் இல்லை எனவும் தெரிவித்து இருந்தேன் அந்த இடத்தில் நான் ஷனத்தை குறிப்பிடவில்லை.
– Advertisement –
கமல் சார் நிகழ்ச்சியின் போது நான் டுபாக்கூர் என்ற வார்த்தையை பயன்படுத்திய காரணத்திற்க்காக தான் மன்னிப்பு கேட்க சொன்னார்.
ஆனால் நான் சனம் ஷெட்டியும், பெண்களையும் இழிவாக பேசியது போல அது வெளியில் இருப்பவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
மேலும் நான் கலந்து கொண்ட குறிப்பிட்ட சில நிகழ்ச்சியை தான் டுபாக்கூர் என சொல்லினேன் தவிர எவரையும் குறிப்பிட்டு சொல்ல சில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.