நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட போட்டோவால் இந்து மத நம்பிக்கையை இழுவு படுத்தியதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
– Advertisement –
தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருகிறார்.
நடிகர், தயார்ப்பாளர் என பன்முக திறமை கொண்ட ராம் சரண், கடந்த 2011- ல் உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு குழந்தைகளும் உள்ள நிலையில் ராம் சரண் சமீபத்தில் கூட பிரம்மாண்ட இயக்குனர் ராஜ மெளலி உடன் இணைந்து ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்துள்ளார்.
– Advertisement –
ஜீனியர் என் டி ஆர் உடன் இணைந்து நடித்த படம் ரிலீசுக்கு ரெடியான நிலையில் சில காரணங்களால் ஒத்தி வைக்கபட்டுள்ளாதால் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா கன்னியாகுமரி சுசீந்திரம் கோவில் கோபுரத்தில் ஆயிர கணக்கான மக்கள் நிற்பது போல புகைப்படம் ஒன்றையும், அதில் தன்னையும் கணவர் ராம் சரணையும் கண்டு பிடியுங்கள் எனவும் ரசிகர்களை கேட்டு கொண்டவர், குடியரசு தின வாழ்த்தையும் பதிவிட்டு இருந்தார்.
– Advertisement –
அதில் நாட்டினை முன்னேற்ற எந்த தடையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்படுவோம் என கேப்ஷன் கொடுத்தும் இருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கல் பலரும் கோவிலின் கோபுரம் புனிதமானது அதில் செருப்பு காலுடன் நிற்பது நியாயமா?
இந்து மக்களின் மத நம்பிக்கையை, உணர்வை புண்ப் படுத்தும் வகையில் உபாசனா பதிவு போட்டிருப்பதாக பலரும் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.
இது வரை தனது பதிவை உபாசானாவும் நீக்காத நிலையில், கணவர் ராம் சரண் உட்பட அவர்கள் அமைதி காத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.