நடிகை ரேகா தனது மகளை பிரிந்து உள்ள சோகத்தில் அவரது தவிப்பை வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

நடிகை ரேகா 80 களில் துவங்கி 96 வரை தமிழ் சினிமாவின் பீக்கில் இருந்த நடிகை ரஜினி, கமல் என எல்லா ஹீரோக்களோடும் நடித்தவர்.

– Advertisement –


கமல் ஹாசனுடன் புன்னகை மன்னன், சத்யராஜ் உடன் கடலோர கவிதைகள் என இவர் நடித்த படங்களில் எல்லாமே நல்ல படங்கள்.

Rekha Daughter

இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் பீக்கில் இருந்த போதே அதாவது 1996ல் ரேகா தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரோடு திருமணம் செய்து கொண்டார்.

ரேகா கல்யாணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி ஒரு நீண்ட பிரேக் எடுத்து கொண்டார். மேலும் இவருக்கு ஒரே ஒரு செல்ல மகளும் உண்டு.

– Advertisement –


ரேகா மீண்டும் சினிமா, சீரியல் என நடிக்க துவங்கினார், அதிலும் குக் வித் கோமாளி தான் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கி கொடுத்தது எனலாம்.

மேலும் பிக்பாஸ் சீசன் 4 ல் ரேகா களம் இறங்கினார் என்ன காரணமோ முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து ரேகா வெளியேற்றபட்டார்.

Rekha Daughter

யூடியூப் சேனல் நடத்தி வரும் ரேகா தனது மகள் அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆனதாகவும் தெரிவித்தார்.

– Advertisement –


மேலும் கொரானா காலகட்டத்தில் மகள் சென்னைக்கும் வர முடியாமல் விசா கிடைக்காமல் நாங்கலூம் அவளை பார்க்காமல் தவித்து வருகிறோம். நான் யாரை பார்த்தும் பொறாமை கொண்டது இல்லை ஆனால், என் மகளையும் அவளது நிலையும் பார்த்து பலர் பொறாமை கொள்கிறார்கள்.

Rekha Daughter

மனதை எப்போதும் நான் இளமையாக வைத்து கொள்கிறேன் அதனால் தான் தற்போது இருக்கும் நடிகைகளுடனும் போட்டி போடுகிறேன் என தெரிவித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: