சமந்தா குறித்து பேசாத ஆளில்லை சர்ச்சை என்றால் சமந்தா என்றால் சர்ச்சை என்ற அளவிற்குக் கடந்த ஆண்டு முழுவதும் சமந்தா சர்ச்சை ஆண்டாக தான் இருந்தது.
– Advertisement –
அதிலும் அவரது விவாகரத்து செய்தி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது எனலாம் .
இதில் சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் எனவும் வேறு வழியில்லாமல் தான் மகன் நாக சைதன்னியா கொடுத்ததாகவும் நாகார்ஜுனா தரப்பு செய்தி வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் சமந்தா அதிகமாக கார்னர் செய்யபட்டதும் மிகவும் மோசமாக பேசப்பட்ட விஷயம் அனைவரும் அறிந்து ஒன்று தான்.
அதிலும் சமந்தா குழந்தை பெற மறுத்தார், அவருக்கு வேறொரு நபருடன் கள்ள தொடர்பு, சினிமா மோகத்தின் ஆடுகிறார் என்றெல்லாம் உட்ச பட்சமாக விமர்சிக்கப்பட்டார்.
– Advertisement –
நடிகை சமந்தா – நாக சைதன்னியா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடை பெற்ற காதல் திருமணம்.
திருமணத்திற்க்கு பிறகு பிறகு சமந்தா நடிக்க மாட்டார் என கூறபட்ட நிலையில், அதற்க்கு பின் தான் சவாலான ரோலில் கலக்கினார். பேமலி மேன் 2, சூப்பர் டீலக்ஸ், என அவர் அடுத்தடுத்து அசாதாரண ரோல்களில் களம் இறங்கி கலக்கினார்.
இதனால் பல சர்ச்சை குடும்பத்திற்க்குள்ளாக கிளம்பியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இதனை அடுத்து தான் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கில் இறங்கி ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்
– Advertisement –
இதற்கிடையே, விவாகரத்து பெற்ற சமந்தா ஆன்மீக பயணத்தில் கவனம் செலுத்தினார். பூஜை பரிகாரம் என பிசியாக இருந்தார்.
இந்த நிலையில் தான் நாகார்ஜுனா தனது டிவிட்டர் பக்கத்தில் சமந்தா குறித்து தான் எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை எனவும் அது தவறான தகவல எனவும் பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு நாட்களாக அமைதி காத்து வந்த நாகார்ஜுனா தற்போது மட்ட வாய் திறந்தது ஏன்? மகனின் பெயருக்கு கலங்கம் வர கூடாது என்றா என நெட்டிசன்கல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.