நடிகர் சிம்பு உடன் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
– Advertisement –
இயக்குநர் ஷங்கரின் முதல் மகளுக்கு சமீபத்தில் திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில் இரண்டாவது மகள் சினிமாவுக்குள் நுழைந்து இருக்கிறார்.

அதிதி ஷங்கர் சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான் அவர் சினிமாவிக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இயக்குநர் முத்தையா சூர்யாவின் 2 டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் விருமன் இதில் கார்த்தி உடன் இணைந்து நடித்து வருகிறார் அதிதி.
– Advertisement –
மேலும் ராஜ் கிரண், சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வரும் இந்த படம் படப்பிடிப்பில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தான் டாக்டர் அதிதி சமீபத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய சிலம்பரசன் உடன் கொரானா குமார் படத்தில் இணைய உள்ளார்.

சிம்பு மாநாடு வெற்றிக்கு பின்னர் வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.