ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை, டம்மி பட்டாஸ் படங்களில் நடித்தவர் இருந்தாலும் கூட அவரது போட்டோ ஷீட் கவர்ச்சிக்காகவே பிரபலமானவர்.
வித விதமான உடைகளில் இவரது அழகான, கவர்ச்சியான போட்டோக்களுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு உண்டு எனலாம்.

ஒரு பக்கம் போட்டோ ஷீட் என்றாலும் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் மூலமாக தான் பட்டி தொட்டி எல்லாம் சென்றடைந்தார் ரம்யா பாண்டியன்.
இந்த நிலையில் இவரை ஏற்றி விட்ட அதே படியே அதாவது சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷீட் தான் இவருக்கு பிரச்சனையை இழுத்து விட்டு உள்ளது.

அம்மன் கெட்டப்பிற்க்காக நடத்த பட்ட போட்டோ ஷீட் ல் ரம்யா பாண்டியன் நீல நிற கவர்ச்சியான உடைகளுடனும் தாமரை மலருடனும் போஸ் கொடுத்து இருந்தார்.
ஒரு பக்கம் கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று ரசிகர்களை திக்கு முக்காட வைத்த ரம்யா பாண்டியன் மற்றொரு பக்கம் அம்மன் வேடத்தில் கூட கவர்ச்சியா என கேள்வியை எழுப்புகிறது.

இதனால் அம்மன் வேடம் என்றால் ஒரு பக்தி வேண்டாமா எந்த சாமி இப்படி உடை அணிந்து இருக்கு ? என ரம்யா பாண்டியனை நெட்டிசன்கல் பலரும் வறுத்து எடுத்து வருகின்றனர்.