அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயர் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் செம்ம வைரல் ஆனதை யாரும் மறுக்க முடியாது.
அந்த அன்ன பூரணி அரசு அம்மா தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அதில் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வந்த அன்னபூரணி மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அரசு வேண்டும் என பேசி,
அதற்க்கு வழக்கம் போல லஷ்மி ராமகிருஷ்ணனும் வறுத்து எடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் பெரும் பேசு பொருளாக மாறியது.
இந்த நிலையில் தான் டிக்டாக் சாதனா என்ற பெயரில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் யூடியூபர் அம்மன் அவதாரம் எடுத்துள்ளார்.
டிக் டாக் சாதனா அம்மன் வேடமிட்டு சாமி வந்தது போல உருமுவதும், சுற்றி உள்ள சில நபர்கள் எங்களை காப்பாற்று அம்மா என கத்தி கூப்பாடு போட்டும், கைதட்டியும் வெளியான வீடியோ ஒரே கூத்தாக இருந்தாலும்,
கடவுள் நம்பிக்கையை சில போலி சாமியார்கள் இப்படி காசுக்காக கேலி கூத்தாக மாற்றுவது பொது மக்களௌ கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.