நடிகையும் ,தொகுப்பாளரும் ஆன மகேஸ்வரி டாஸ்மார்க்கில் நின்று மது வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சன்மியூசிக் ,சன் டிவி என முன்னணி சேனல்களில் தொகுப்பாளராக பல ரசிகர்களை ஈர்த்தவர் திடீர் கல்யாணம் பண்ணி ப்ரேக் எடுத்தார்.

பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை பிரிந்து சீரியல் , திரைப்படங்கள் என தொடர்ந்து பிசியாக நடித்து வந்தவர் விஜே மகேஸ்வரி அவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்த நிலையில் தான் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த வி ஜே மகேஸ்வரி அதன் முடிவில் அவர்கள் கொடுத்த டாஸ்க்கையும் செய்தார்.

அதில் அவர் ஒயின் ஷாப் வாசலில் நின்று அவர்களிடம் ஏதோ கை அசைத்து கேட்டு வாங்குவது போல சில வீடியோ காட்சிகள் சில நாட்களுக்கு முன்னதாக வெளியானது.
அந்த வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ந்து போன வி ஜே மகேஸ்வரி ரசிகர்கள் ஒரு குடும்ப குத்து விளக்கு செய்ற காரியமா இது ? என கொந்தளித்தனர்.
உண்மையில் அந்த முழு நீள வீடியோவை பார்த்த போது தான் அவருக்கு டாஸ்மாக் வாசலில் நின்று 500 ரூபாய்க்கு சில்லறை வாங்கும் டாஸ்க் கொடுக்கபட்டதும், அவர் செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து என்னப்பா இது இடக்கு முடக்கா பில்டப் தறீங்க என சம்மந்தபட்ட சேனலை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.
[…] சன் மியூசிக் ,சன் டிவி என முன்னணி சேனல்களில் தொகுப்பாளராக பல ரசிகர்களை ஈர்த்தவர் திடீர் கல்யாணம் பண்ணி ப்ரேக் எடுத்தார்.பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை பிரிந்து சீரியல், திரைப்படங்கள் என தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார் விஜே மகேஸ்வரி. […]