நடிகையும், விஜே ஆகவும் கலக்கி வரும் மகேஸ்வரி தனது திருமண வாழ்க்கை விவாகரத்துக்கு சென்றது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளர்.

– Advertisement –


சன் மியூசிக் ,சன் டிவி என முன்னணி சேனல்களில் தொகுப்பாளராக பல ரசிகர்களை ஈர்த்தவர் திடீர் கல்யாணம் பண்ணி ப்ரேக் எடுத்தார்.

பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை பிரிந்து சீரியல், திரைப்படங்கள் என தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார் விஜே மகேஸ்வரி.

VJ Magewsari

கமல் நடிப்பில் விக்ரம், துருவ் & விக்ரம் இணைந்து நடித்த மகான் என பல படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்த நிலையில் தான் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த விஜே மகேஸ்வரி, கடந்த பத்து வருடங்களாக நான் சிங்கிள் தான்.

– Advertisement –


திருமணம் ஆன ஒரே வருடத்தில் நாங்கல் பிரிந்து விட்டோம், மகனுக்காக தொடர்ந்து ஓட வேண்டியது உள்ளது.

ஜோடிதாக மற்றவர்களை பார்க்கும் போது எனக்கும் ஆசையாக இருக்கும் எனக்கு மட்டும் நல்ல துணை அமையவில்லை என்ற வருத்தம் உண்டு.

VJ Magewsari Son

சினிமா வாய்ப்புகளுக்காக நிறைய அஜஸ்மெண்ட் செய்ய கேட்டார்கள் நான் மறுத்து விட்டேன், நேர்மையாக கிடைத்த வாய்ப்புகளில் பணி செய்து வருகிறேன்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைப்பு வந்தால் என் மகனின் மன நிலை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் வருகிறது, எனவே இப்போதைக்கு அந்த எண்ணமும் இல்லை என பதில் அளித்து உள்ளார்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: