விஜய் தொலைக்காட்சி யில் டி ஆர் பியில் பட்டய கிளப்பி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா, இந்த தொடருக்காகவே ஆயிர கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
– Advertisement –
இந்த தொடரில் இருந்து தொடர்ச்சியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர்கள் விலகியதால் கடுப்பான இயக்குனர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து வைரல் ஆகி வருகிறது.
நடிகை ரோஷினி ஹரிப் பிரியனை அடுத்து அடுத்ததாக பிரபல நடிகை பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிய செய்தி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ரோஷினி சமீபத்தில் சினிமா பட வாய்ப்புகள் கிடைக்க பாரதி கண்ணம்மா போன்ற டி ஆர் பியில் பீக்கில் இருந்த தொடரில் இருந்து விலகினார்.
தற்போது, குக் வித் கோமாளி சீசன் 3 ல் விசிட் கொடுத்துள்ளார், இந்த நிலையில் அடுத்த நடிகை அதாவது இவருக்கு தங்கையாக தொடரில் வந்த அஞ்சலி விலகியுள்ளார்.
பாரதி கண்ணம்மா தொடரை பொறுத்த வரை விஜய் டிவியில் தற்போது வரை டி ஆர் பியின் உச்சத்தில் உள்ள சீரியல்.
– Advertisement –
பிரிந்த கணவன்-மனைவிக்கு இடையே 2 பெண் குழந்தைகள் அவரைகளை இணைத்து வைக்க போராடும் குடும்பம் என கதை களம் நகர்ந்து வருகிறது.
இதில் கண்ணம்மா கேரக்டரில் வினுஷ்யா தற்போது கலக்கி வருகிறார். இந்த கேரக்டரின் தங்கையாகவும் வெண்பாவுக்கு போட்டிதாக வில்லியாக கலக்கியவர் அஞ்சலி.
அதாவது அஞ்சலியாக நடித்த கண்மணி மனோகர் இவர் ஆரம்பத்தில் பாரதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பின்னர் அவர் தம்பியை திருமணம் செய்து கொண்டார்.
இதனை அடுத்து இருவருக்கும் இடையில் நடந்த பிரச்சனைகள் அநேகம் ஒரு கட்டத்தில் திருந்திய அஞ்சலி தற்போது நல்ல நபராக இருக்கிறார்.
– Advertisement –
இதற்கிடையில் தான் ஜீ தமிழில் சூப்பர் குயின் நிகழ்ச்சிக்காக கண்மணி தொடரில் இருந்து விலகியுள்ளார் எனவும் அவருக்கு அதே டிவியில் முக்கிய தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து பாரதி கண்ணம்மாவில் இருந்து நடிகர்கள் விலகுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அதன் இயக்குநரும் கடுப்பில் தான் உள்ளாரும் போல,
அவரது சமூக வலைதள பக்கத்தில் அய்யய்யோ எத்தனை பேர் தான் மாற்றம் முடிய வில்லை என பதிவு போட்டிருந்தார் இந்த பதிவு தற்போது வரல் ஆகி வருகிறது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.