மகான் படத்தில் இருந்து வாணி போஜன் நடித்த ஒட்டு கொத்த சீன்களும் நீக்கபட்டதால் செம்ம கடுப்பில் இருக்கிறார் என தகவல்.

– Advertisement –


நடிகை வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என்கிற அளவிற்க்கு ரசிகர்களால் செல்லமாக கொண்டாடப்படுபவர் என்றால் அது மிகையாகாது.

சன் டிவியில் தெய்வ மகள் சீரியலில் சத்தியா என்ற பெயரில் நடித்தார் இவருக்கு பலத்த வரவேற்பைப் பெற்று கொடுத்ததும் இந்த தொடர் தான்.

vani bhojan mahaan

நடிகை சாயாசிங் கணவர் கிருஷ்ணன் தான் இவருக்கு ஜோடியாக நடித்தார் அதில் வில்லியாக வந்த அண்ணியார் கதாபாத்திரம் இன்றளவும் மிக பிரபலம்.

இதனை அடுத்து வாணி போஜன் சினிமாவுக்குள் நுழைந்தார் வைபவ் உடப் மலேசியா டூ அம்மீசியா, அஸ்வின் உடன் ஓ கடவுளே என அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுத்தார்.

– Advertisement –


இதனை அடுத்து சியான் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள மகான் படத்திலும் அவர் கம்மிட்டானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

மகான் படம் சியான் விக்ரம் க்கு 60 ஆவது படம் மேலும் மகன் துருவ் உடன் முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் என பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து உள்ளனர். மாதவிலக்கு தான் படத்தின் மையக்கரு.

vani bhojan mahaan

சுதந்திர போராட்ட குடும்பத்தில் பிறந்த சியான் விக்ரம் க்கு காந்தி மகான் என அவரது அப்பா பெயர் சூட்டி அவரை காந்திய கொள்கையுடன் வாழ வற்ப்புறுத்துகிறார்.

40 வருடம் வரை காந்திய கொள்கைகள பின்பற்றும் விக்ரம் அவரது பிறந்தாளௌ ஒட்டி ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறார் அது மொத்தமாக அவரது வாழ்க்கையை புரட்டி விடுகிறது.

அங்கிருந்து அவரது வாழ்க்கை செல்லும் பாதையை நோக்கி படத்தின் கதை களம் அமைந்துள்ளது. ஆக்‌ஷன், காமெடி, திரில் என பல எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்கிறது படம்.

– Advertisement –


படத்தில் சியான் விகரமிற்க்கு நெருக்கமான காட்சிகளில் விலை மாதுவாக வாணி போஜன் நடித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் படம் வெளியாகும் வரை படத்தின் டீசர், பிக்ஸ் என எல்லாவற்றையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்த வாணி போஜன் தற்போது அமைதி காத்து வருகிறார்.

vani bhojan mahaan

படத்தின் துவக்கத்திலும், இறுதியில் காஸ்ட்டிங் லிஸ்டிலும் வாணி போஜன் பெயர் இடம் பெற்றுள்ளது அதற்க்கு நன்றி கார்டும் போட்டு உள்ளனர். ஆனால் படத்தில் அவரது சீன்கள் மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளது.

அவரது சீன்கள் ஏன் நீக்கப்பட்டது என படக் குழு சார்பாக இது வரை எந்த தகவலும் வெளியாக வில்லை, ஆனால் படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கலாம என கூறப்படுகிறது.

– Advertisement –

Categorized in: