பள்ளி கல்லூரிகளில் ஒரு நாளைக்கு லீவுப் போடவே நமக்கு நாக்கு தள்ளிவிடும் அதிலும் வேலைதளத்தில் ஒரு நாள் வேலையில் இருந்து விலகி லீவ் எடுத்தால் அது பெரிய விஷயம் தான்.
– Advertisement –
இந்த சூழலில் ஒரு மனிதன் சுமார் 70 ஆண்டுகளாக வேலைக்கு விடுப்பு எடுக்காமல் உழைக்க முடியாமா ? ஆம் என அதற்கு சாட்சியாக நிற்கிறார் பிரைன் சோர்லே.
பிரைன் சோர்லே கடந்த 1953 ஆம் ஆண்டில் போரில் அப்பா இராணுவத்திற்க்கு சென்று விட குடும்ப வறுமைக்காக தனது 15 ஆவது வயதில் வேலைக்கு செல்ல முடிவு எடுத்தார்.
கிளார்க்ஸ் என்ற ஷீ கம்பெனியில் கடந்த 70 ஆண்டுகளாக நேரத்திற்கு பணிக்கு வந்து நேர்த்தியாக வேலை செய்து வருகும் பிரைன் சோர்லே.
தற்போது 83 வயது வரை கிட்ட தட்ட 70 ஆண்டுக் காலமாக ஒரு நாள்க் கூட வேலைக்கு விடுப்பு எடுக்காமல் உழைத்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ?
– Advertisement –
பிரைன் தனது மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாதாக இழந்து விட்டார். வீட்டில் தனியாக வசித்து வருவதால் எனக்கு ஓய்வு வேண்டாம்.
எனது ரிட்டைர்மெண்டுக்கு பதிலாக என் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் உழைத்துக் கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன் என அவர் கூறி இருப்பது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.