ஒரு மனைவியை கட்டி வாழ்வதற்க்கே முடியாமல் நாக்குத் தள்ளி கிடக்கும் நபர்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் மொத்தமாக 8 பெண்களை கல்யாணம் கட்டி குதூகலமாக வாழ்ந்து வருகிறார்.

– Advertisement –


தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஓங் டாங் சோரூட், டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை மணந்து அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எந்த வித சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

அத்தனை மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த காதலுடனும இருக்கின்றனர். அவரும் அப்படியே அனைத்து மனைவிகளையும் அன்பாகவும், எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் நடத்துகிறார்.

இவரது முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்துள்ளார். காதலித்து அவரை திருமணம் செய்த பிறகு இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார்.

– Advertisement –


அவர் மீதும் காதலில் விழுந்து உள்ளார். நாங் எல்லிற்கு சோரூட்டின் முதல் திருமணம் குறித்து தெரிந்த பின்னரும் அவரை திருமணம் செய்துவிட்டாராம்.

இப்படியே ஒவ்வொரு பெண்களையும் வெவ்வேறு இடங்களில் சந்தித்த ஷோரூட் அவர்கள் மீது கண்டவுடன் காதல் வயப்பட்டுள்ளார். மேலும் அவர்களையும் காதலில் வீழ்த்தியுள்ளார்.

இப்படி முன்னதாக இருக்கும் மனைவிகளை தெரிந்து கொண்ட பிறகே அடுத்தடுத்த மனைவிகளை அவர் திருமணம் செய்து இருக்கிறார்.


அது எப்படி இவர்கள் கணவனை பங்குப் போட்டு கொள்ள சம்மதித்தார்கள் என்ற கேள்விக்கு அவரது மனைவிகள் கூறும் ஒரே பதில் ஷோரூட்டின் அன்பு தானாம்.

அவரது அன்பிற்க்கு அடிமையானப் பெண்கள் அவரை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் அவருக்கு அடுத்த அடுத்த மனைவியாக வாக்கப்பட்டு இருக்கின்றனர்.

– Advertisement –


இப்படி 8 மனைவிகளை மொத்தமாக கட்டிய ஷாரூட்டிற்க்கு ஒரு நாளைக்கு ஒரு மனைவி என படுக்கையில் உல்லாசம் அனுபவித்து வருகிறாராம்.

இப்படி சுழற்சி முறையில் டைம் டேபிள் போட்டு 8 மனைவிகள் உடன் குதூகலமாக வாழ்ந்து வருகிறார் ஷோரூட். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: