இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற அனுபவம் குறித்து பிரபல நடிகை சந்தோஷி வெளியிட்ட வீடியோ இணையத்தில் செம்ம வரவேற்பைப் பெற்று உள்ளது.
இளவரசி, அரசி, சூரிய புத்திரி உள்ளிட்ட பிரபல சீரியல்கள் மூலமாக சின்னத்திரையில் கொடிக் கட்டி பறந்த நடிகை தான் சந்தோஷி பாலா, இவரது மரியாதை, பொற்காலம், ஆசை ஆசையாய், வீராப்பு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படமான பாபா மூலமாக அறிமுகமானார், ஹீரோயின் மனீஷா கொய்ராலாவுக்கு தங்கையாக நடித்து இருப்பார். பாபா படம் மூலமாக அறிமுகமான பின் நாட்களில் சீரியலிலும் செம்ம போடு போட்டார். பின்னர் திருமணம் செய்துக் கொண்டார்.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பின்னர் நடிப்பை விட்டு மேக்கப் ஸ்டுடியோ நடத்தி பிரபலமான யூடியூபராக இருக்குறார்.
இந்த நிலையில் சந்தோஷி பாலா தனது பிரசவத்தின் போது எடுப்பபட்ட வீடியோவை இணையத்தில் பதிவு ஏற்றியுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.