பாண்டியன் ஸ்டோர்ஸ்: விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர் அடுத்த சில மணி நேரத்துக்குள்ளாக படப்பிடிப்புக்கு சென்று நடித்து கொடுத்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிதுக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரு அண்ணன் 3 தம்பிகள் எந்த உதவியும் இல்லாமல் தவித்து பின்பு முன்னுக்கு வருவதே கதை களம்.
அந்த சீரியலில் மெயின் லீடாக சுஜிதா – ஸ்டாலின் நடித்து வர அதில் கடை குட்டி தம்பியாக நடித்து வருபவர் தான் கண்ணன் எனும் சரவண விக்ரம்.
இயல்பான நடிப்பும் எதார்த்தமான நகைச்சுவை டயலாக் மூலமாக நம் வீட்டில் உள்ள கடைக் குட்டி தம்பியாகவே மாறிவிட்டார் எனலாம்.

அவர் சில தினங்களுக்கு முன்னதாக பெரும் விபத்தில் சிக்கியதாகவும் அந்த விபத்தின் வலிகளுடனே அடுத்த 4 மணி நேரத்தில் நடிக்க பட பிடிப்பு தளத்திற்க்கு சென்றதாக அவரது சகோதரி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கான மரியாதையை கூட்டியுள்ளது, மேலும் அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.