தளபதி விஜய் அம்மா ஷோபா அருவி சீரியல் நடிகை ஒருவரை அவரது நடிப்பிற்க்காக பாரட்டியுள்ளாராம் யார்ன்னு தெரியுமா ?

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி நல்ல டிஆர்பி யில் இருக்கும் சீரியல் தான் அருவி அதில் அம்பிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

திமிரான மருமகள் கராரான மாமியார் இடையே நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் தான் கதைகளமாக கொண்டு நகர்ந்து வருகிறது. அதில் நெகடிவ் ரோலில் நடித்து வருபவர் தான் சோனியா கதாநாயகனை திருமணம் செய்ய ஆசை பட்டு ஏமாறும் நபராக நடித்து வருகிறார்.

இந்த சோனியா வை எங்கயோ பார்த்தது போல இருக்குன்னு நினைக்குறீங்களா? அதாங்க சன் டிவியில் செம ஹிட் சீரியலில் நடிச்சவங்க. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சன் டிவியில் வெளியாகி செம டிஆர்பி ஏத்திய அழகி சீரியலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

திவ்யா ரோல் அடக்கமான குடும்ப தலைவி, இது அந்த நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களை ரசிகர்களாக மாற்றியது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் விஜயின் அம்மா ஷோபா சோனியாவின் கணவருக்கு பேமலி நண்பராம். ஷோபாவிடம் நான் நிறைய பேசுவேன், அவங்களும் நல்லாவேப் பேசுவாங்க, நாங்க நல்ல பிரண்ட்ஸாகிட்டோம்.

இது வரைக்கும் நான் தளபதி பத்தி அவங்க கிட்ட பேசியதே இல்ல அவங்களும் பேசல ஏன்னா எங்களுக்கு எங்களை பற்றி பேசவே நேரம் பத்துறது இல்ல.

மேலும் அருவி சீரியல் என் நடிப்பை பார்த்த சோபா அம்மா எனக்கு வாழ்த்து கூறி என்னை பாராட்டினார் என சோனியா பகிர்ந்துள்ளார்.

Categorized in: