இளையராஜாவின் இசை என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதிலும் மழையும் இளையராஜா இசையும் தவிர்க்க முடியாத ஆளுமை எனலாம்.

சமகால ரசிகர்களை தாண்டி இன்றைய இளசுகளையும் தனது இசையால் கட்டி வைக்கும் திறன் படைத்தவர் இளையராஜா. அவர் இது வரை பல ஹிட் பாடல்களுக்கு சினிமா துறையில் இசை அமைத்து இருந்தாலும் தற்போது அவர் பெருமை பூமியை தாண்டி விண்வெளி செல்கிறது.

அதாவது கடந்த வருடத்தில் அப்துல்கலாம் அவர்கள் பெயரில் மிக எடை குறைந்த சாட்டிலை செய்யபட்டு விண்ணில் வெற்றிகரமாக ஏவபட்டது.

உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாளில் கூட அவரின் முப்பரிமாண (3D) புகைபடத்துடன் சட்டிலைட் விண்ணில் ஏவபட்டது. இந்த நிலையில் தான் அந்த குழு அடுத்தகட்ட முயற்சியாக இசை ஞானி இளைய ராஜாவின் இசையை விண்ணில் ஒலிக்க செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் அதற்கான ஒப்புதலும் பிரதமர் வழங்கியதாக கூறப்படும் நிலையில் இஸ்ரோ உதவியுடன் இதற்கான வேலைகள் துவங்கியுள்ளன.

இதற்கிடையில், இந்தியில் சுவானந்த் கிரத்திரே எழுதிய இந்த நாட்டின் பெருமையை கூறும் பாடலை தமிழில் மொழி பெயர்த்து,

அந்த பாடல் வரிகளுக்கு இளைய ராஜா இசை அமைக்கிறார் மேலும் இதற்காக அவர் எந்த பணம் வாங்க வில்லை என்ற கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.

Categorized in: