கானா பாடகி இசைவாணி தன் முன்னாள் கணவர் அவரை கொலை செய்துவிடுவதாகவும், ஆசிட் வீசிவிடுவேன் என்றும் காவல் துறையிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கானா பாடல் மூலமாக பரீட்சைதமான இசை வாணி பிரபல தொலை காட்சி ஒன்றில் பாட்டு பாடும் நிகழ்ச்சி மூலமாக லைம் லைட்டில் வந்தார்.
பின்னர் அந்த ஆண்டிலேயே டிரம்ஸ் இசைக்கலைஞர் சதீஸ் என்பவரை பெற்றோர்கள் சம்மதம் இல்லாமலேயே காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதை பல மேடைகளில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார், என்ன நடந்ததோ அந்த திருமணம் ஒரு வருடம் கூட நிலைக்க வில்லை.
அவர்கள் இருவரும் 2020 – ல் ஒருமித்து திருமண முரீவு செய்து விவாகரத்து செய்து கொண்டனர், இதனை அடுத்து தான் பிரபல தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கானா இசைவாணி நுழைந்தார். BBCயின் சிறந்த 100 பெண் சாதனையாளர்கள் பட்டியலில் இவரும் ஒருவர் என்ற பெருமையுடன் அவர் அதை அந்த மேடையிலும் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் பிக்பாஸ் வீட்டின் உள்ளே அவரது திருமணம் குறித்தோ, கணவர் குறித்தோ எந்த விதத்திலும் அவர் வாய் திறக்க வில்லை.
இதனால் பலரும் அவரை நோக்கி கேள்வி கேட்டு வந்த நிலையில், அவர் அது முடிந்து போன விசயம் எனவும் அது பற்றி பேச எதுவும் இல்லை.
மேலும் அது குறித்து மறைக்க எந்த அவசியமும் இல்லை எனவும் கராராக பதில் அளித்தார். இதற்கிடையே அவர் தனது முன்னாள் கணவர் தன் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும்,
விவாகரத்து பெற்று வேறு பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையிலும், எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆன விஷயத்தை மறைத்து ஜோடியாக எடுத்த புகைபடங்களை இணையத்தில் பதிவு ஏற்றி வருகிறார்.
மேலும் கச்சேரி புக்கிங் செய்யும் பலரிடம் என் மனைவியை பாட வைக்கிறேன் என பொய்யாக கூறி பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி வந்ததால்,
ஆத்திரமடைந்த இசைவாணி அவரிடம் இது குறித்து கேட்ட போது அப்படி தான் செய்வேன் , மீறி கேட்டால் உன் மீது அசிட் அடிப்பேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.