நடிகை நீலிமா ராணிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக உலகநாயகன் கமலுடன் தேவர் மகன் படத்தில் தனது சினிமா படத்தை துவங்கியவர் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

சினிமா வை தொடர்ந்து சின்னதிரையிலும் பிசியாக நடித்து வந்த நீலிமா ராணி சினிமா துறையை சார்ந்த இசை என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

neelima rani Esai Vanan

பின்னர் அவர்கள் முக்கிய கடமைகளை முடித்த பின்பு தான் குழந்தை பெற்று கொள்வோம் என முடிவு செய்ததாகவும் சரியாக அந்த பணிகளை முடித்தவுடன் மூத்த மகள் பிறந்ததாகவும்,

அவரது யூடியூபில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார், இதனை அடுத்து கடந்த ஆண்டு 13 வருட காதல் வாழ்க்கையை கொண்டாடிய நீலிமா,

தான் இரண்டாவதாக கருத்தரித்து இருப்பதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

neelima rani pregnant photoshoot

இதனை அடுத்து அவர் நடத்திய கர்ப்பகால போட்டோ ஷீட்ஸ் எல்லாம் மிக பிரத்யேகமாகவும், காண்பர்களை பிரம்மிக்க வைக்கும் அளவிலும் இருந்தது.

அதிலும் இங்கிலாந்து ராணியாகவும், தாமரையின் மீது அமர்ந்த கர்ப்பவதி அம்மன் போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆனது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை தெரிவித்து உள்ளர்.

ரசிகர்கள் பலரும் நீலிமா ராணி யின் கியூட் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categorized in: