ராஜீ ஜெயமோகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி கனியை பறித்தவர் அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ராஜீ கல்லூரி காலத்தில் இயக்கிய குறும்படம் மூலமாக இயக்குனர் பாக்கியராஜ் உடன் உதவி இயக்குநராக பல படங்களுக்கு பணியாற்றியவர்.

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், நாம் இருவர் நமக்கு இருவர் – 2, ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி என பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் கலக்கி வந்தவர் பிக்பாஸ்க்கு எண்டிரி கொடுத்தார்.
ஆரம்பத்தில் இருந்தே எண்டர்டெயின்மெண்ட் கையில் எடுத்து அதை சரியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

பிறகு நிகழ்ச்சி முடிவில் வெற்றியாளராக 50 லட்சம் ரூ தட்டி சென்றார். மேலும் இவர் இருந்த 16 வாரங்களுக்காக வாரம் 1.5 லட்சம் வீதம் 21 லட்சம் சம்பளமாக வழங்கபட்டுள்ளாதாம்.
மொத்தத்தில் 71 லட்சம் ரூபாயை அசால்ட்டாக சம்பளமாக வாங்கி சென்றுள்ளார் ராஜீ. தற்போது பேட்டி கொடுப்பதில் பிசியாக இருக்கும் ராஜீ.
ஒரு நேர்காணலின் போது நடிகை காயத்திரி சீரியலில் கத்தியாக எப்போது நடிக்க வருவீங்க என கேட்ட கேள்விக்கு எப்போ கூப்பிட்டாலும் வரேன் என்றவர்.
தொடர்ந்து சீரியலில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளாதாகவும் தெரிவித்தார். மேலும் சில படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளத்காக தகவல் வெளியாகி உள்ளது.