தளபதி விஜய் 66 ஆவது பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் என மாறுபட்ட குழுவுடன் இந்த படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது
இந்த படத்தில் தளபதி இராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். துப்பாக்கி படத்தில் மிலிட்டரில் உடையில் செம டிரீட் வைத்த தளபதி மீண்டும் அதே கெட்டப்பில் வருகிறார்.
பீஸ்ட் படத்தின் இரண்டு கட்ட படபிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தளபதி அவரது அம்மா ஷோபா உடன் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

தளபதிக்கும் அவரது அப்பா எஸ்ஏ சந்திர சேகருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அவர் பெயரில் கட்சி ஆரம்பிக்க முற்பட்டார்.
அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் அப்பா மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்ததும் அனைவருக்கும் தெரிந்தது தான்.
இதில் அவரது அம்மா ஷோபாவும் எஸ்ஏ சிக்கு எதிராகவும் தளபதிக்கு ஆதரவாகவும் பேசினார். இதனை அடுத்து குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தான் தற்போது தல அஜித்தின் சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் கூலாக அம்மா ஷோபாவுடன் தளபதி விஜய் நிற்க்கும் பிக் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அப்பாடி ஒரு வழியா பிரச்சனை தீர்ந்து நம்ம தளபதி குடும்பம் ஒன்னு கூடிட்டாய்ங்கப்பான்னு ரசிகர்களும் செண்டிமெண்ட் மோடுக்கு போயிட்டாங்க.
இந்த புகைப்படம் வெளியானது அடுத்து சோஷியல் மீடியாவில் தளபதி ரசிகர்கள் செம ட்ரெண்டாக்கி வருகின்றனர்.