தளபதி விஜய் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகை சத்தமே இல்லாமல் ரகசியமாக காதல் திருமணம் செய்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் 2019ல் வெளியான ‘பிகில்’ படத்தில் முக்கிய ரோலில் அனிதா என்ற பெயரில் நடித்தவர் நடிகை ரேபா மோனிகா ஜான்.

reba monica marriage stills

இவரின் நடிப்பும், கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் திரண்டது இந்த படத்தின் மூலமாக தான்.

எனினும் ரேபா ஏற்கனவே மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படமும் தமிழில் ஹரீஸ் கல்யாணுடன் தனுசு ராசி நேயர்களே, ஜருகண்டி என பல படங்களில் நடித்துள்ளார்.

reba monica marriage stills

தற்போது தமிழில் நடிகர் விஷ்ணு விசாலுடன் FIR உட்பட பல மொழி படங்களில் கமிட் ஆகி தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஊரடங்கில் தனது பிறந்த நாளை துபாயில் கொண்டாடியா ரேபாவுக்கு அவரது நீண்ட நாள் நண்பரான ஜோய் மோன் லவ் பிரபோஸ் செய்தார்.

அதை சற்றும் எதிர்ப்பாராத ரேபா இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் உடனே ஏற்றுக் கொண்ட நடிகை ரேபா அவருடன் லிவிங்கில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

reba monica marriage stills

இதற்கிடையில் கடந்த ஜனவர் 9 ஆம் தேதி கேரளாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மட்டும் காதல் கணவர் ஜோய் மோனை திருமணம் செய்து கொண்டார் ரேபா.

நடிகை ரேபா மோனிகா – ஜோய் மோன் காதல் திருமண போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து பலரும் பராட்டுகளையும், வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Categorized in: